*இன்றைய ஊக்கம் :* உங்களுக்கு எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை
"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை". ரோமர் 8:1
பிசாசு தொடர்ந்து குற்றம் சாட்டுகிறான் என்று வேதம் சொல்கிறது.
எனவே நாம் எப்படி ஆக்கினையிலிருந்து விலகி இருக்க முடியும்?
1. கலாத்தியரில் குறிப்பிடப்பட்டுள்ள மாம்ச வேலைகளிலிருந்து விலகி இருங்கள்
2. பரிசுத்த ஆவியைப் பின்பற்றுங்கள்
கலாத்தியரில் 17 விதமான மாம்ச வேலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில பாலியல் பாவம், அசுத்தம், உருவ வழிபாடு, வெறுப்பு, மாறுபாடுகள், தேவையற்ற வைராக்கியம், கோபம், பிரிவு, கள்ளப்போதனைப் போன்றவை நம்மை
பரலோகத்திற்குள் நுழைவதைத் தடுக்கக்கூடிவையாயும் தலைவராக பதவி உயர்வு பெறுவதைத் தடுக்கக்கூடியவைகளாயும் இருக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் உங்களை ஆக்கினைத்தீர்ப்பில்லாமல் இருக்க வழிநடத்தி, தலையாக மற்றும் ஆசீர்வாதமாக இருக்க உங்களுக்கு உதவட்டும். இந்த நாள் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக அமையட்டும். (VJ R Roy) .
இரண்டு வருடத்தில் வேதாகமத்தை முடிக்க : நெகேமியா 6:5 - 7:30
அனுதின தியானத்திற்கு :
http://www.youtube.com/vjministries
http://www.facebook.com/vjministries
Spotify: http://bit.ly/vjmpodcast